உங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்: மோடி கட்டம்!
மக்கள் விரும்புவது நேர்மையும், பாதுகாப்பையும் தான்; குடும்ப அரசியலை அல்ல என கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு!!
மக்கள் விரும்புவது நேர்மையும், பாதுகாப்பையும் தான்; குடும்ப அரசியலை அல்ல என கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு!!
சுமார் ரூ.40 ஆயிரம் கோடி கன்னியாகுமரிகுமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்க பாரத பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிகுமரி மாவட்டம் வந்தடைந்தார். இந்தவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், உங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள். நான் இன்று இருப்பேன்; நாளை சென்றுவிடுவேன்; ஆனால் இந்தியா எப்போது இருக்கும் என மக்களிடம் மோடி உரையாடுனார்.
மக்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த நற்பணிகள், பல தலைமுறைகள் நினைவுகூறப்படும். ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. காந்தி அமைதி விருதை பெற்றதற்கு, விவேகானந்தா கேந்திராவுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
தேஜஸ் ரயில், மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னை பெரம்பூரில் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. விரைவில் பாம்பன் பாலம் கட்டப்பட உள்ளதை பார்க்க உள்ளீர்கள். உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. இங்கு உள்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில், வேகமாக வளரும் நாடு இந்தியா என்பதன் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் கடந்த ஞாயிற்று கிழமை துவக்கி வைக்கப்பட்டது. முதல் தவணையில் ரூ.2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 1 கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு நிதி செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த 24 மணி நேரமும் உழைத்தோம்.காங்கிரசின் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம், தேர்தலின் போது தான் வரும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவிக்கும்.
மக்கள் நேர்மையையும், முன்னேற்றத்தையும், வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் தான் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சர்வாதிகாரம், கொள்கை முழக்கம், தடைகளை விரும்பவில்லை. துணிச்சல் மிக்க முடிவை எடுக்க 30 ஆண்டுக்கு பின் வலிமையான அரசை மக்கள் தேர்வு செய்தார்கள்.
2004 முதல் 2014 வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. டில்லி, மும்பை, புனேயில் குண்டுகள் வெடித்தன. மக்கள் எதிர்பார்த்ததை அப்போதிருந்த அரசுகள் செய்யவில்லை. யூரி தாக்குதலுக்கு பிறகும், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பிறகும், நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. அவர்களுக்கு நான் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால் தான் நாடு பாதுகாப்பாக உள்ளது.
உலகமே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பாராட்டும்போது, இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்களின் அறிக்கைகள், பாகிஸ்தானுக்கு உதவியாக உள்ளது. நாட்டிற்கு காயத்தை ஏற்படுத்துகிறது. நமது ராணுவத்தை ஆதரிக்கிறீர்களா, சந்தேகிக்கிறீர்களா என அவர்களிடம் நான் கேள்வி கேட்கின்றேன். அரசியலுக்காக நாட்டை பலவீனப்படுத்த வேண்டாம்
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம் .
சிலர் ஊழல் முறையை வாழ்க்கை முறையாக கொண்டுள்ளனர். ஆனால், நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் தொலைபேசி மூலம் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொண்டனர். தேர்தலில் ஒரு பக்கம், வலிமை வாய்ந்தவர்கள் உள்ளனர். மறுபக்கம் ஊழல் செய்தவர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தான் எனது குடும்பம். அவர்களுக்காகவே வாழ்வேன், வீழ்வேன் என உரையாடினார்.