சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெம்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு அளித்தார். இதையடுத்து இன்று சட்டசபையில் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்குக்கு எடப்பாடி கோருவார். அவர் தனக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார்.


ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 122 குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.


திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும். இதேபோல கடந்த 1991-ல் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.