என்னை கட்சியில் சேர்க்காவிட்டால் தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்திக்கும் என மு.க.அழகிரி அறிவிப்பு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிற செப்டம்பர் 5ம் தேதி மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார். சுமார் 1 லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள் எனவும், அதன் பின்னர் தமிழக அரசியலில்  என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அழகிரி கூறியுள்ளது ஸ்டாலின் தரப்பில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். 


இந்த பேரணிக்காக மதுரையில் உள்ள தனது தொண்டர்களுடன் மு.க.அழகிரி கடந்த 2 நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தி.மு.கவில் சேருவதற்கு கதவை தட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. அமைதி பேரணிக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை தமிழகம் பொறுத்திருந்து பார்க்கட்டும்.


என்னை கட்சியில் சேர்க்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்திக்கும். ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு, தி.மு.க எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது?" என பேசினார்.