ரஜினியும்-கமலும் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே போன்று ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தமிழகத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளநிலையில், ரஜினியும்-கமலும் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே போன்று ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்... தான் டெல்லிக்கு அரசு முறை பயணமாக செல்வதாக அவர் தெரிவித்தார். விருதுநகரில் நடந்த விழாவில் முதலமைச்சர் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசும் கட்சியும் உள்ளது என அவர் தெரிவித்தார். 


எனவே, இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சிறுபான்மை மக்களுக்கு நூற்றுக்கும் மேல் எவ்வளவு உயரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் அதிமுக அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். 


மேலும் அவர் கூறுகையில், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. 1972 ஆம் ஆண்டில் MGR திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கட்சியை தொடங்கினார். MGR சிறப்பாக 11 ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். அதன் பின்னர் ஜெயலலிதா கட்சியை ஒன்றாக்கி 40 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடியாக மாற்றினார்.


நல்ல ஆட்சி நடந்துக் கொண்டு இருக்கிறது. 2021ல் ஆட்சிக்கு அங்கீகாரம் தரும் வகையில் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள். நல்ல நிலையில் எழுச்சிமிக்க இயக்கமாக அதிமுக உள்ளது. ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் கிடைக்கலாம். போராட்டம் நடத்துவர்களை அழைத்து முதலமைச்சர் 3 முறை சந்தித்து பேசி உள்ளார். சட்டமன்றத்தில் தெளிவாக பேசியுள்ளார். வண்ணாரப்பேட்டை மக்களிடம் நான் பேசியுள்ளேன். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர், வருவாய் துறை அமைச்சர் சொல்லியும் இஸ்லாமிய மக்கள் புரிந்து போராட்டத்தை கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்.


மத்திய அரசை மாநில அரசு சந்திப்பது சகஜம் தான். நிதி உள்பட பல விசயங்கள் பற்றி வெளியே சொல்ல முடியாது. மக்கள் கணக்கெடுப்பில் சில ஷரத்துகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் அழுத்தம் தரப்படும். மத்திய அரசு பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.