எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தலைவர் கலைஞர் இறப்பிற்கு பின்னர் அவரது மூத்த மகன் முக அழகிரி அவர்கள் தன்னை திமுக-வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். எனினும் திமுக தரப்பில் இருந்து இவரது குரலுக்கு செவி சாய்க்கப்படவில்லை.


இதற்கிடையில் முக அழகிரி அவர்கள் திமுக-விற்கு எதிராக தனி கட்சி துவங்கவுள்ளார் எனவும், வரும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி இடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது தனது விசுவாசிகள் விரும்பினார் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன், தனி கட்சி துவங்கும் என்னமிஇல்லை என தெரிவித்துள்ளார்.


திருவாரூரில் இன்று நடைபெற்ற மறைந்த தலைவர் கருணாநிதியின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய முக அழகிரி இதுகுறித்து தெரிவிக்கையில்... 


"திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என் எனது விசுவாசிகள் விரும்பினால் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன். என்னை அனைவரும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. 


கலைஞரின் கொள்கைகளை என்றும் நான் பின்பற்றுவேன். என்னை பாஜக இயக்குவதாக கூறுவது வதந்தி. 


அமைதிப் பேரணி கலைஞரின் நினைவுக்காக  நடத்தப்பட்டதே தவிர எனது பலத்தை நிரூபிக்க அல்ல. தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை" என தெரிவித்துள்ளார்!