பேருந்துக் கட்டணத்தை உயர்வை கண்டித்து தமிழக அரசைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசைக் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினேன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய சில முக்கிய குறிப்புகள்:- 


தமிழக அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் உயர்த்தியது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஆனால் திமுக ஆட்சி நடத்திய போதும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட்டது. 


பேருந்துக் கட்டண உயர்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினார்கள். 


அதன் பிறகு பேருந்து கட்டணம் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, பைசா கணக்கில் பேருந்துக் கட்டணத்தை குறைத்தது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என அரசு கூறுகிறது.


பேருந்துக் கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாகத்திறமையின்மையே காரணமாகும். போக்குவரத்து கழகங்களில் உதிரி பாகங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது.


பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது எப்படி என்பது குறித்து திமுக சார்பில் 27 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன அறிக்கையை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அளித்துள்ளேன்.


அதனை சரியாக பின்பற்றினால் போக்குவரத்து துறையை சீர் அமைத்து, பேருந்துக் கட்டண உயர்வை தடுக்கலாம்.


ஏற்கெனவே, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. கூறிய சீக்கரத்தில் காட்சி மாறும். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் சட்டப்பேரவையில் அவரது படத்தை வைத்து, இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வந்த சட்டப்பேரவையின் மரபை கெடுத்து விட்டனர். 


திமுக எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை கவிழ்க்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் நினைத்தால் திமுக-விற்கு ஒரு நிமிடம் போதும், ஆனால் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரக்கூடாது என்பதாலேயே இந்த ஆட்சியை விட்டுவைத்துள்ளோம். 


தேர்தலை சந்தித்து ஜனநாயக முறையில் திமுக ஆட்சியில் அமரும்.


பேருந்துக் கட்டணத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.