ஹிந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்துள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த இவர் தற்போது தனது பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், இவருக்கு தனது சொந்த ஊரான கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதியில் சொந்த நிலம் மற்றும் வீடு உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) கணக்கு வைத்துள்ளார். 


ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கடன் வாங்க திட்டமிட்டுள்ளார். தற்போது அந்த வங்கியில் மேலாளராக பணிபுரிபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர். கடன் பெற வங்கி மேலாளரிடம் சென்று வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை காண்பித்துள்ளார். 


ALSO READ | See Pics: அம்மாவாகும் அனுஷ்கா சர்மாவின் பிகினி புகைப்படம் வைரல்!!


அப்போது, வங்கி மேலாளர் கூறுகையில்., "Do u know Hindi" (உனக்கு ஹிந்தி தெரியுமா?) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் "I dont know Hindi, but I know Tamil and English" (எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும்) என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். ஆனால், வட இந்திய வங்கி மேலாளர், "I am from Maharashtra, I know Hindi. Language problem" (நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை) என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, இதே வங்கி கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன் என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என கூறியுள்ளார்.  


இதையடுத்து, வீட்டிற்கு திரும்பிய மருத்துவர், மொழி பிரச்சனையை காரணம் காட்டி கடன் தர மறுத்ததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும், அவர் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால், கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.