IIT-Madras-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 (Covid-19) நோயாளிகளுக்கு (Patients) சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களைப் (Healthcare Workers)  பாதுகாக்க ஒரு வடிகட்டியை உருவாக்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நைலான் அடிப்படையிலான நானோ-கோடட் வடிகட்டி (Nano coated filter), செல்லுலோஸ் காகிதத்தில் பாலிமர் பூச்சை  பயன்படுத்துகிறது. இது எலக்ட்ரோ-ஸ்பின்னிங் செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


பூச்சு பண்புகள், காற்றில் உள்ள துணை மைக்ரான் அளவிலான தூசி துகள்களை திறம்பட அகற்ற உகந்ததாக இருக்கும். இந்த வடிகட்டி முறை தற்போது கள சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கள சோதனைகள் மூலம் சரிபார்க்கப்பட்டவுடன், மொத்த உற்பத்திக்கு பரிந்துரைக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் (Researchers) தெரிவித்துள்ளனர்.


இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO நிதியுதவி அளித்து வருகிறது. முன்னதாக இது பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படவிருந்தது. பின்னர், தொற்றுநோய் நெருக்கடி எழவே, இது தற்போது சுகாதாரப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.


வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த ரகுராம் செட்டி மற்றும் பொறியியல் வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த சரவண குமார் உள்ளிட்ட ஐ.ஐ.டி-மெட்ராஸின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் உள்ளது.


நானோ -கோடட் வடிகட்டி, முகக்கவசங்கள், சுவாச சாதனங்கள், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள காற்று சுத்திகரிப்பு அமைப்பு, விமான கேபின்கள், கவச வாகன இயந்திரங்கள், கணினி ஹார்ட்-டிஸ்க் வடிகட்டிகள், நியூமேடிக் கருவிகளின் ஆகியவற்றின் துகள் வடிகட்டித் திறனை அதிகரிக்கிறது.


ALSO READ: 6 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா.. நாட்டில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது


தற்போது ஆராய்ச்சியாளர்கள் நானோ பொருட்களின் பூச்சு அளவுருக்களை மொத்த உற்பத்திக்கு மலிவு விலையில் மேம்படுத்தவும் வைரஸ் தடுப்பு பண்புகளை சோதிக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.


பல அடுக்கு முகக்கவசங்களை உருவாக்க, ஒன்றுக்கு மேற்பட்ட நானோ பொருள் பூச்சுகளைக் கொண்ட கலப்பு நானோ-கோடட் வடிகட்டிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ALSO READ: இந்திய மருந்துகள் மீது பரிசோதனை செய்ய உலக சுகாதார நிறுவனம் தடை விதிப்பு..!