‘பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’என்று இளையராஜா கூறியதுதான் கடந்த சில நாள்களாக விவாதமாகி இருக்கிறது. சமூக நீதிக்கு பாதகம் விளைவிக்கும் மோடி தலைமையிலான ஆட்சியை கண்டு அம்பேத்கர் எப்படி பெருமைப்படுவார். இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியும், இளையராஜாவை விமர்சித்தும்வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இளையராஜா தனது மனதுக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் என மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவரை இளையராஜாவுக்கு தங்களது ஆதரவை அளித்திருக்கின்றனர்.



மேலும், இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் மறைமுகமாக விமர்சனம் செய்தனர். முக்கியமாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இந்த விவகாரம் குறித்து சில நாள்களுக்கு முன்பு ட்வீட் ஒன்று செய்திருந்தார்.


அதில், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?


 



கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது. திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பதையும் அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது” என நேரடியாகவே கூறியிருந்தார்.


மேலும் படிக்க | 50 ஆண்டு கால பொதுவாழ்வில் நேர்ந்த அவமானத்தை சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின்


இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேவையில்லாமல் திமுகவை இதில் இழுக்க வேண்டாம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. 



பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே,இளையராஜா விஷயத்தில் தங்களை தேவையில்லாமல் பாஜகவினர் சீண்டுகின்றனர். இளையராஜாவின் கருத்துக்கு திமுகவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் பிம்பத்தை கட்டமைக்க அவர்கள் முயல்கின்றனர் என திமுகவினர் கூறிவருகின்றனர். ஆகமொத்தம் இளையராஜா எழுதிய முன்னுரை தமிழ்நாடு அரசியல் களத்தில் நீண்ட நாள்கள் கழித்து பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.


மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR