ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து புகார் வந்தால் உடனே நடவடிக்கை: செங்கோட்டையன்!
ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியா அவர்.,
2012 முதல் 2014 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆதாரமற்ற புகார் என்று தெரிவித்தார். புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்வாகத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் முதன் முதலில் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டதாக செங்கோட்டையன் கூறினார்.