Pensioners and Family Pension News In Tamil: நாடு முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறக்கூடிய வகையில், அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளும், அவர்களுக்கான சலுகை விவரங்கள் குறித்தும் தகவல்கள் வெளியிடப்படும். அந்தவகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஓய்வூதிர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அவர்களது குறைகளை தீர்க்கும் வண்ணம், "ஓய்வூதர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" நடத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வாறு நடைபெறக்கூடிய குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை "ஓய்வூதியர் குறைதீர்ப்புக் கூட்டம்" நடைபெறுவதற்கு முன்பாக மனுவாக தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. 


அதாவது குறிப்பிட்ட இந்த தேதிக்குள் ஓய்வூதிர்கள் தங்களது முறையீடுகளை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதிர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். 


விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதிர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலும், சென்னை கூடுதல் ஓய்வுதிய இயக்குனர் அவர்கள் முன்னிலையிலும் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 


இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்கள் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை ஜனவரி 27 முதல் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம். 


நீங்கள் அனுப்பும் விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை,  பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். 


தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான பதில் ஏதாவது பெற்றிருந்தால், அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும். 


ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வி.பா. ஜெயசீலன் தெரிவித்து உள்ளார். 


மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அப்டேட், அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3,57,500 வரை உயரும்


மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன், இரட்டை பென்ஷன் குறித்து முக்கிய தகவல்


மேலும் படிக்க - மார்ச் 31 கடைசி தேதி.. முன்னாள் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ