சென்னை: நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு (Lockdown) உத்தரவு மீண்டும் போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனை பிறகு, தமிழகத்தில் வரும் திங்கள் (மார்ச் 22) முதல் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று (COVID-19) பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை (TN Schoool Holiday) விடப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | சென்னையில் கொரோனா அதிகரிப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்


அதேநேரத்தில் 9, 10 ,11 ஆகிய வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Online Class) தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு (12th Class) மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொடர்ந்து வகுப்பை நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


ALSO READ | COVID-19: இனி MASK வேண்டாம் என தெரிவித்த முதல் மாநிலம் இதுதான்!


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR