’ஆசிரியர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்க’ பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர்
பரமக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் டிசம்பர் 7-ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில், பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த முகாமுக்குப் பிறகு, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளனர். இரட்டை அர்த்த வார்த்தைகளையும், அடிக்கடி தொட்டு பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, அந்தப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார், மாணவிகளிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
பின்னர், பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். அவருடைய புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், சமூக அறிவியில் ஆசிரியர் விருதுநகரைச் சேர்ந்த ராமராஜைக் கைது செய்தனர். மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் ஆல்வின் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு ஆசிரியர்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவரவ பாலமுத்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ALSO READ | Police station: சீக்கிரம் பஞ்சாயத்தை முடிங்கப்பா! எங்களுக்கு வேற வேலை இருக்கு!
இதனிடையே, தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஆல்பர்ட் ஆல்வின் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராமராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வலியுறுத்தியும் பெருமாள்கோவில் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்பப்மாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் மேலாய்க்குடி மற்றும் பரமக்குடி பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR