நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்படவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் ரூபாய் 1.22 கோடி மதிப்பிலான 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, 2 அறுவை சிகிச்சை அரங்குகள், தானியங்கி இரத்த பரிசோதனை ஆய்வகம் மற்றும் மாணவர்கள் விடுதி ஆகியவற்றை திறயது வைத்து பார்வையிட்டார். 


அப்போது பேசிய அமைச்சர்... "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசில் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். பல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் தன்மையுடையவர்களுக்கும் பல் மருத்துவ சேவைகளை எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில், 348 பல் மருத்துவ பிரிவுகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுகின்றன. இது படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 


மேலும், 39 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பில் பல் சிகிச்சைப் பிரிவும், 147 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் பல் சிகிச்சைப் பிரிவுகளுக்கு 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பில் பல் ஊடுகதிர் கருவியும் விரைவில் வழங்கப்படும்" என்றார்.


இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) மரு. நாராயணபாபு, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சரவணன், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ஜெயயதி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. வசயதாமணி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.