IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?

India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

  • Sep 22, 2024, 13:32 PM IST

இந்தியா - வங்கதேசம் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப். 27ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 /8

வங்கதேசம் அணி இந்தியாவுக்கு (Team India) தற்போது சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை இந்தியா - வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) விளையாட உள்ளன.  

2 /8

இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப். 19ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  

3 /8

போட்டியின் நான்காம் நாளான இன்று (செப். 22) இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.   

4 /8

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

5 /8

இதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னதாக முதல் போட்டிக்கான இந்திய அணியை மட்டுமே அறிவித்திருந்தது.    

6 /8

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு பிசிசிஐ இரண்டாவது போட்டிக்கான ஸ்குவாடை அறிவித்திருக்கிறது. அதாவது, அந்த ஸ்குவாடை அப்படியே இரண்டாவது போட்டிக்கும் தக்கவைத்திருக்கிறது. அதே ஸ்குவாட் என்றாலும் பிளேயிங் லெவனில் (IND vs BAN 2nd Test Playing XI) சில மாற்றங்களை அடுத்த போட்டியில் எதிர்பார்க்கலாம்.   

7 /8

முதல் போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவ், அக்சர் படேல், யாஷ் தயாள், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். கேஎல் ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப், பும்ரா ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம்.  

8 /8

இரண்டவாது போட்டிக்கான இந்திய ஸ்குவாட்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்