இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
நாட்டின் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சியடைவதைப்போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் கருத்துகள் சர்ச்சையாகி வருகின்றன. புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். இருப்பினும் பாஜகவின் சித்தாந்தங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பேச்சின் மூலம் பொதுவெளிக்கு கொண்டு செல்கிறார் எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வரிசையில் சனாதன தர்மம் குறித்து ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து விவாத பொருளாக மாறியுள்ளது. சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்
ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க | ATM இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்த கஜினி முகமது சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தகர், பெஷாவர் நகரங்களை உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க ராணுவத்தால் தகர்க்கப்பட்டது. இதில் இருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை நாம் அறிந்துகொள்ளலாம்.
இந்த நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. ஒரே பரமேஸ்வரா என்பதையே சனாதன தர்மம் கூறுகிறது.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தமிழகத்தில் சனதான தர்மத்தை எதிர்த்து பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் சனாதன தர்மத்தை உணர்வை வளர்த்து, மக்களை தூண்டி, மதரீதியாக பாஜக பிளவுபடுத்த முயல்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்த ஆளுநரின் கருத்து தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR