தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற செய்வதற்கு அக்கட்சியின் தேசிய தலைமை பல்வேறு முயற்சிகளை பல காலமாக செய்துவருகிறது. அந்தவகையில் ஐபிஎஸ்ஸாக பணியாற்றிய அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தது.
அதனையடுத்து அண்ணாமலையும் தமிழ்நாட்டில் பாஜக கொடியை பறக்க வைப்பதற்கு ஏகப்பட்ட முயற்சிகளை செய்துவருகிறார். சமீபத்தில்கூட அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுகவா இல்லை பாஜகவா என்ற சந்தேகத்தை எழுப்பிவருகிறது.
ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு மட்டுமின்றி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை செய்வது, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வது என அண்ணாமலை சுற்றி சுழன்றுவருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டார் என கூறியிருந்தார்.
ஆனால் ஆற்காடு வீராசாமி உயிருடன் இருப்பதால் அவரது பேச்சு விமர்சனங்களை சந்தித்தது. மேலும் தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூடவா தெரியாது. இவர் உண்மையில் ஐபிஎஸ்தானா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.
இந்தச் சுழலில், ஆற்காடு வீராசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான கலாநிதி வீராசாமி, தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பாஜக. தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார் என ட்வீட் செய்திருந்தார்.
Dr.
உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்!நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்! https://t.co/E0MKgguKSi
— K.Annamalai (@annamalai_k) June 10, 2022
இதனை ரீ ட்வீட் செய்த அண்ணாமலை, உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்!
மேலும் படிக்க | 6 பேர் விடுதலை... விரைந்து முன்னெடுங்கள் - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR