தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. 


கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடற்கரை பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே இந்த கோடை காலத்தில் திடீரென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை நினைத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்றபடி எப்போதும் இருக்கும் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவ வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.