தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலணம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செண்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.