தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளநிலையில், 30 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்வதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சாதாரண மக்கள் மீது மின் கட்டண உயர்வு திணிக்கப்பட இருக்கிறது.


இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன்னரே கட்டணத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கும். தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது. அரசு விரைவில் மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும். பொதுவாக மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் எண்ணம் இருந்தால், அது தொடர்பாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.


அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஒப்புதல் பெற்றுவிட்டதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. 30 சதவீதம், 47 சதவீதம் என 2 விதமாக கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்து இருந்தது. 


இந்நிலையில், தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை என மின்வாரிய இயக்குநர் பேட்டியளித்துள்ளார். மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.