இந்த நிதியாண்டில், விவசாயத்திற்கு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தங்கமணி விளக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபை 10 நாள் விடுமுறைக்குப்பின் நேற்று மீண்டும் தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, பேரவையில் இன்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள மின் நிலையம் மின்மாற்றி பழுதடைந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதாகவும், எனவே அவசர நிலை கருதி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சட்டடமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் குறிப்பிட்ட பகுதியில் இயங்கி வரும் மின்மாற்றி பழுது புகார் பற்றி குறித்து தனது கவனத்திற்கு இதுவரை வரவில்லை என்றும், அதேபோல அந்த பகுதியில் மின்தடை ஏற்படுவது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வரவில்லை எனவும் தெரித்தார்.  


தற்போது இந்த பிரச்சனையை குறிப்பிட்டுள்ளதால் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அதற்கான பணிகள் நாளையே தொடங்கப்படும்  எனவும் கூறினார். மேலும், இந்த ஆண்டு தட்கல் முறைப்படி 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.