நெல்லை அருகே, இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொது மக்கள் வியந்து பார்த்துச் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். பசு மாடுகள் வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பசுமாடு ஒன்று நேற்று ஈன்ற கன்று இரு தலை மற்றும் நான்கு கண்களுடன் இருந்தது.


பசு மாடு மிகவும் சிரமப்பட்டு பசுங்கன்று ஈன்ற நிலையில், இரண்டு தலையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்தது. பிறந்த கன்று குட்டிக்கு நான்கு கண்கள், இரண்டு வாய், இரண்டு மூக்குகள் இருந்த நிலையில், இரண்டு காதுகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று நான்கு கால்கள் மட்டுமே இருந்தது.


ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்

பிறந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடனும் இரண்டு வாய்களுடனும் இருப்பதால், தாய் பசு கன்றுக் குட்டிக்கு பாலூட்டுவது சிக்கலாக உள்ளது. இதனால்,அந்த கன்றுக்கு தேவையான உணவுகளை முருகன் குடும்பத்தினர் வழங்கி பராமரிக்கின்றனர். இரட்டை தலை கொண்ட அதிசய கன்று குட்டி பிறந்த தகவல் தெரிய வந்ததும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கன்றுக் குட்டியை வியந்து பார்த்து செல்கின்றனர். 


கங்கைகொண்டான் கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள், அந்த கன்றுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.


முன்னதாக, ஆக்ஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரையை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் இரண்டு தலைகளுடன் ஒட்டி பிறந்த அதிசய பெண் கன்றுக்குட்டி பிறந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் ராஜஸ்தானிலும் இரட்டை தலை கொண்ட அதிசய கன்று குட்டி பிறந்ததாக செய்தி வெளியானது. 


கன்று குட்டிகள் இரு தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கண்கள், வாய் ஆகியவற்றுடம் பிறப்பதற்கு, கருவின் வளர்ச்சியின் போது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய் பசுவின் உடலில் கருவின் வளர்ச்சியின் போது, ​​செல்கள் பல பகுதிகளாகப் பிரியும் நிகழ்வின் போது சில சமயங்களில் உயிரணுக்கள் தேவைக்கு அதிகமாக வளர்ந்து விடும். இதனால் தான் இரண்டு தலைகள், மூன்று கண்கள், நான்கு கண்கள், இரு வாய், நான்கு காது ஆகியவை  உருவாகின்றன என்றார். 


ALSO READ | உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையா?