திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் இளைஞர்கள் 5 பேரை தனிப்படையினர் கைது செய்திருக்கின்ற நிலையில், மேலும் மூவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் காவல் துறை தரப்பில் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் (வயது 45). இவர் நீடாமங்கலம் கடைவீதியில் நின்றிருந்தபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.


இது குறித்து தகவலறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நீடாமங்கலம் கடை விதியில் தமிழார்வனின் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட வன்முறையில் லாரி, அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 


ALSO READ | கொடுமை! வேலூரில் சிறுவனை கொலை செய்து பழி தீர்த்த இளைஞர்கள்


போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீடாமங்கலத்தில் பதற்றம் குறையாததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு பதற்றத்தை குறைக்க 850 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.


இந்நிலையில் தமிழார்வன் கொலையில் தொடர்புடைய பூவனூர் ராஜ்குமார்(33), மனோஜ் (23), பாடகச்சேரி மாதவன்(23), அறையூர் சேனாதிபதி (25), எழிலரசன் (22) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.


பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ராஜ்குமார் மீது காவல் நிலையத்தில் தமிழார்வன் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் வெளியே வந்துள்ளர்.


இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தமிழார்வன் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மேலும் 3 நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தமிழார்வன் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் முலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் CCTV காட்சிகள் வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அக்கட்சியினரால் பகிரப்பட்டு வருகிறது.


ALSO READ |  பகீர் தகவல்! கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR