டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்திலும் ஐடி ரெய்டு
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விவேக், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள், கோடநாடு எஸ்டேட் என ஏராளமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.