சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ₹433 கோடி வரிஏய்ப்பு செய்யபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் கோவையில் இயங்கி வரும் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் விற்பனை விவரத்தை சரிவர தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக தெரிவித்து ரேவதி, லோட்டஸ் உள்பட பல்வேறு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம்  திடீர் சோதனை நடத்தினர்.


அதன்படி சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ரேவதி குழும நிறுவனங்களான ரேவதி நகைக்கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட், ரேவதி பர்னிச்சர் மற்றும் பாத்திரக்கடை, ரேவதி துணிக்கடை, சென்னை சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த தீடீர் சுமார் ₹433 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில்.,  


சென்னையில் கடந்த ஜனவரி 29-ஆம் நாள் துவங்கி 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. 


இதில் ₹433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.