வருமான வரித்துறை சோதனையில் ரூ. 25 கோடி பறிமுதல்... யாரிடம் சிக்கியது!!
முன்னணி படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 25 கோடி பறிமுதல்.
சென்னை: முன்னணி படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ. 25 கோடி மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மறுபுறம் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு மகற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த "பிகில்" படத்தில் நடித்த நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவரின் அடுத்த படமான "மாஸ்டர்" படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்ததால், "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, நடிகர் விஜய்யை சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுகிறது. "பிகில்" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது எனத் தகவல்.
காலையில் இருந்து நடைபெற்று வரும் சோதனையில் ஏஜிஎஸ் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 25 கோடி மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.