சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை...
சிறையில் உள்ள சசிகலாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று நாளையும் விசாரணை...
சிறையில் உள்ள சசிகலாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று நாளையும் விசாரணை...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.ம.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான வி.கே.சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.
போயஸ் கார்டனில் சோதனை நடைபெற்றபோது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று வேறொரு வழக்கிலும் சசிகலா சிக்கலை சந்தித்து வருகிறார்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்தார். இதில், சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜரகலாம் என்று உயர்நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.