வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை குறித்து இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர் வருமானவரித்துறையினர்.
கடந்த 29 ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தினர். சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது எனக் கூறப்பட்டது.
அதன்பின்னர் ஏப்ரல் 1 ஆம் தேதி மீண்டும் வேலூரில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர் இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இன்று சோதனையில் சிக்கிய பணத்தை பற்றி இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கை ஆய்வு செய்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.