செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை: சிபிஐ விசாரணைகோரிய மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை உகந்தது அல்ல என மனுவை திருப்பி அனுப்பியது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரில் உள்ள திமுகவினர் தடுத்ததோடு, அவர்கள் சென்ற வாகனத்தை உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 9 இடங்களில் வருமானவரித் துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள் ஆகியவற்றை திமுக-வினர் எடுத்துச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும், வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியது குறித்தும் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதனிடம் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு அவர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதா என்பது குறித்து விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் முடிவு செய்வார்கள் எனவும், மனு குறித்து பதிவுத்துறை சரிபார்க்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மனுவை பரிசீலித்த பதிவுத்துறை, இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதரார் பாதிக்கப்பட்ட நபர் அல்ல எனவும், பொதுநல வழக்கு தாக்கல் செய்ய விதிமுறைகள் பின்பற்ற வில்லை எனவும், ரிட் மனுவாக இதனை விசாரணைககு பட்டியலிட முடியாது எனவும் இந்த வழக்கு நிலைக்க தக்கது அல்லது விசாரணை உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை திரும்ப அனுப்பியது.
மேலும் படிக்க | அரிசி கொம்பன் யானையால் கதவை அடைத்த அமைச்சர்... செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ