சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், கோத்தகிரி, கர்சன் பகுதியில் உள்ள, 'கிரீன் டீ எஸ்டேட்டில் இன்று  நான்காவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 9-ம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனையடுத்து இரண்டு கார்களில் வந்த, ஆறு பேர் குழுவினர், தொடர்ந்து நான்காவது நாளாக நாளாக, விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். எஸ்டேட் தொழிலாளர்களின் மொபைல் போன்களை, அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.


தற்போதைய சோதனைகள், கோடநாட்டை விட, கர்சன் எஸ்டேட்டை மையப்படுத்தியே அதிகம் நடந்துள்ளன. இங்கு, மறைத்து வைக்கப்பட்டிருந்த முக்கியமான ஆவணங்கள், தங்கம், வைரம் புதையல் சிக்கியுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.


மேலும் சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


ஜெயா டி.வி அலுவலகம், கிருஷ்ணபிரியா இல்லம் என பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.