ஐடி ரெய்டு: 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்!!
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், கோத்தகிரி, கர்சன் பகுதியில் உள்ள, `கிரீன் டீ எஸ்டேட்டில் இன்று நான்காவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கிறது.
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், கோத்தகிரி, கர்சன் பகுதியில் உள்ள, 'கிரீன் டீ எஸ்டேட்டில் இன்று நான்காவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கிறது.
கடந்த 9-ம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐடி அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ஜெயா டி.வி., சி.இ.ஓ., விவேக் நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
அந்த வங்கி கணக்குகள் அனைத்தும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி கணக்குகளில் பண மதிப்பிழப்பிற்கு பின் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.