வரும் நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் கூறியதாவது:-


தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட 11 உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. வெப்பமான மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதனால் 11 உள்மாவட்டங்களிலும் அடுத்தடுத்த நாட்களில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். இதனால் 11 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கூறியுள்ளார்.