சுதந்திர தினம் 2017: முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர்
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.