மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பொன்மலைப்பட்டியலில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றுள்ளர், இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து பெற்றோர் ஒருவர் நடுவீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
கட்சியின் மாவட்ட செயலாளரே பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது திருச்சி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது இந்து மக்கள் கட்சி. " இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக பதவி வகித்த திரு கா.ராஜ்குமார் எனும் நபர், கட்சியின் செயல் திட்டங்களுக்கும், வரைமுறைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணாக செயல்பட்ட காரணத்தினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
இனி அவரின் எந்த செயல்பாடுகளுக்கும் இந்து மக்கள் கட்சி பொறுப்பேற்காது. மேலும், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் மற்ற சகோதர இயக்கத்தினரும் அவருடன் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தபடுகிறது நன்றி" என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR