திருச்சி பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை உற்பத்திக்கான திறன் மற்றும் தேவைகளை விரிவுபடுத்துவது குறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசகர்கள் வாயிலாக உள்ளூர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் (MSMEs) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Udhayanidhi Stalin : இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் தண்ணீர் முறையாக வந்தது என்றும் மீண்டும் காவிரிக்கு இந்த ஆண்டு தண்ணீர் வரவில்லை என்றும்தான் நான் பேசினேன் என தெரிவித்தார்.
Trichy Government Job: திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 30 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trichy News : திருச்சி மாவட்ட ஆட்சியர் ரேஷன் கார்டு அப்டேட் மற்றும் வணிகர்களுக்கான முக்கிய அறிவிப்பு என இரண்டு லேட்டஸ்ட் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Ration Card : ரேஷன் கார்டு கைரேகை அப்டேட் செய்வது குறித்த முக்கிய அறிவுறுத்தலை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Trichy : குழந்தை பெயர் பதிவு செய்வதற்கான காலவகாசத்தை நீட்டிப்பு மற்றும் உழவர் பாதுகாப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகிய இரண்டு அறிவிப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Trichy Latest News : திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிறப்பு பதிவேடுகளில் விடுப்பட்டுள்ள குழந்தை பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Trichy : திருச்சி மக்கள் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம். முழு விவரம்
Trichy ECHS Recruitment: முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) திருச்சிராப்பள்ளி கிளினீக்குகளில் ஒப்பந்த அடிப்படையில் 40 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Tamil Nadu Government Trichy loan mela : திருச்சி மக்கள் தங்களின் தொழிலதிபர் கனவை நனவாக்க மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பணியாளர்கள், நிலுவை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி மனு அளித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
Trichy latest news : திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Trichy Train Service : திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலானது, வரும் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்துகொள்வோம்.
Trichy Job News: SEZ அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இத்தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 14.98 மில்லியன் ஜோடி விளையாட்டு காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இத்திட்டம் 11,629 பெண்கள், 1,602 ஆண்கள் மற்றும் 133 திருநங்கைகள் உட்பட மொத்தம் 13,364 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
Trichy Latest News: திருச்சி மாவட்டத்தில் லாட்ஜில் நண்பர்களுடன் போதை ஊசி செலுத்திய பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிரிழந்தது தொடர்பாக இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.
Trichy : திருச்சி மாவட்டத்தினர் சொந்த தொழில் செய்ய ரேஷன் கார்டுடன் குறிப்பிட்ட சில ஆவணங்களை எடுத்துச் சென்று விண்ணப்பித்தால் மானிய வட்டியில் லோன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.462.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trichy Crime Latest News : திருச்சியில் 14 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்த நிலையில், காரில் இருந்து சிறுமியை இறக்கி விட்டுச் சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் அந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளது.
Kadhir Anand Speak About Vijay: வேலூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்சியில் கலந்து கொண்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சியில் முதலமைச்சர் விஜய் எதிர்கட்சிகளை குறித்து பேசிய அவர், எதிர்கட்சித் தலைவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மேடை நாகரிகத்தைக் கற்றுக் கொண்டு பொறுப்புள்ள முதலமைச்சராக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Trichy Nursing Student Death : கடந்த மே மாதம் செவிலியர் மாணவி ஒருவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தது குறித்து நர்சிங் மாணவிகள் கடும் சந்தேகங்களை எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
RB Udaykumar speech about CM Vijay News: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திருச்சிக் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
CM Vijay Trichy Meeting : தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் நாளை திருச்சியில் மக்கள் சந்திப்பு விழாவில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிகழ்வில் யார் யார் பங்கேற்க முடியும்? யார் யார் பங்கேற்க வேண்டாம்? என அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் விளக்கம் தெரிவித்துள்ளார்.