Heatwave Warning: ‘மஞ்சள்’ அலர்ட்.. 18 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.. மக்களே எச்சரிக்கை!
Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Moderate Heatwave Warning, IMD: இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்ப அலை வீசும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்
தமிழ்நாடு பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காற்று திசை மாறுபாடு காரணமாக, இன்று (ஏப்ரல் 25) தென் தமிழக மாவட்டங்கள், வடதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மேலும் படிக்க - அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் மிகவும் வெப்பமான நகரங்கள்!
அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை
நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும். அதேபோல தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
எந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்?
எனவே இன்று 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நீர் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குழந்தைகளை, பெரியவர்களை வெளியில் அதிகமாக அழைத்து வர வேண்டாம். மேலும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் மற்றும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ