உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!

கோடைக்காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.

Last Updated : May 20, 2019, 01:13 PM IST
உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்! title=

கோடைக்காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள முறைகளை பயன்படுத்தவும்.

> தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும்.
> இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.
> ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.
> 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை  குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.
>இளநீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.

Trending News