COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது பங்களிப்பை பிரதிநிதிதுவப்படுத்தும் விதமாக பொதுத்துறை இந்தியன் வங்கி செவ்வாயன்று தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகரின் தலைமையக வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பத்மஜ சுந்துரு காசோலையை இன்று தலைமைச் செயலாளர் கே சண்முகத்திடம் ஒப்படைத்தார்.


25.38 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியர்களின் பங்களிப்பும் அவர் வழங்கியதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடனளிப்பவர் எடுத்த வங்கி முயற்சிகள் குறித்து பேசுகையில், இந்தியன் வங்கி தனது ATM-கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாகவும், டிஜிட்டல் சேனல்கள் பரிவர்த்தனைகளின் ஓட்டத்தை உறுதி செய்வதற்காக 'உகந்ததாக' செயல்படுவதாகவும் கூறினார்.


மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்கள், கோழிப்பண்ணை மற்றும் வேளாண் தொழில்துறையினருக்கான COVID அவசரக் கடன்களை வங்கி முன்பு தொடங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் இதுவரை 49,393 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 33,560 வழக்குகள் செயல்பாட்டில் உள்ள வழக்குகளாகும். மற்றும் 14,136 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் 4058 தொற்றுகள் இதுவரை பதிவாகியுள்ளது. இதில் 1485 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 33 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சென்னையில் 2007 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன,. இந்நிலையில் பொதுதுறை வங்கி தமிழக அரசுக்கு தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது.