பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக அமல்படுத்த மருத்துவ கவுன்சில் கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த அரசில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. பாஜக ஆளும் பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தினாலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை.


தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வுகள் நடக்க உள்ள நிலையில், உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநிலங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 11 ஆம் தேதிக்குள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


இதை தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் மூலமாக இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை ஒன்றை வலிவுறுத்தி உள்ளது.அக்கடிதத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.


மேலும், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், ஏற்கனவே இருப்பதில் 25% கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் வலிவுறுத்தி உள்ளது.