Sachin Siva Allegation: இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப். 18) இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான  TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் 'முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்' என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 'மீனவர்களுக்காக என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி


மேலும் இதுகுறித்து கேட்டபோது, 'அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது' எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த நடத்துனர், 'நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 


வீடியோ: