LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்தும் அரசாணை தற்காலிகமா நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு புதியதாக தொடங்கியுள்ள LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தும் அரசாணை ஜனவரி வரும் 30-ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப் படாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  


முன்னதாக சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கல்வித்துறை சார்பில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், அரசு புதியதாக தொடங்கியுள்ள மழலையர் LKG, UKG வகுப்புகளில் பணி அமர்த்தப்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் வின்சென்ட்பால்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


வின்சென்ட் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது., LKG, UKG வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள், கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும், அதனால், இடைநிலை ஆசிரியர்களை LKG, UKG வகுப்புகளுக்கு பணியமர்த்துவது ஏற்றத்தக்கதல்ல என தெரிவித்திருந்தார்.


இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுப்பிரமணியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தளர்வு கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் ஜனவரி 30-ஆம் நாள் வரை இந்த அரசாணை நடைமுறைப் படுத்தப்படாது எனவும் உறுதியளித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.