அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


பெண்களின் சிறப்பினையுண், உரிமைகளையுண் உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. இந்த இனிய நாளில் அனைத்து மகளிர்க்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அம்மா வழியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


பெண் சிசுக்கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்குதல், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தங்கம் வழங்கும் திட்டம், அரசு அலுவலங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அமைத்தது போன்ற என்ற சமூக நடத்திட்டங்கள் பெண்களுக்கான கொண்டுவரப்பட்டு உள்ளது.


பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி வழங்க 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு உதவிமையம் மூலம் 181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி அமைக்கப்பட்டு உள்ளது.


பெண்கள் தன்னம்பிக்கையுடனும்,  விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை உறுதியுடன் எதிர்க்கொண்டு, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.