புதுடெல்லி: இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் மற்றுமொரு இனிப்பான செய்தியை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டாப் -20 குளோபல் வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுக்கு (Top-20 Global Women of Excellence award) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி கே. டேவிஸ் தலைமையிலான இல்லினாய்ஸின் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் (Multi Ethnic Advisory Task Force, Illinois) இந்த சர்வதேச விருதை வழங்கியுள்ளது.


இந்த விருது பற்றி தெலுங்கானா மாநில ஆளுநராகவும், பண்டிச்சேரியின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஜூரி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "நீங்கள் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், பெண்களின் சமத்துவம் மற்றும் சமூகத்திற்கான உங்கள் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் பெண்களின் பிரதிநிதியாக இருப்பதால், இந்த விருதுக்காக உங்களை தேர்வு செய்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.


Also Read | தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை!


பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின-சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக போராடுவதற்கான முயற்சிகளின் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் டாக்டர் தமிழிசை மேற்கொண்ட முயற்சிகளை விருதுகள் கமிட்டியின் நடுவர் பாராட்டினார்.


மார்ச் 7 ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் நடைபெறும் 9 வது காங்கிரஸின் சர்வதேச மகளிர் தின கண்காட்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டது.



தற்போது புதுச்சேரியின் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியிலிருந்து மெய்நிகர் கூட்டம் மூலம் இந்த விருதை ஏற்றுக்கொள்வார்.


இந்த ஆண்டிற்கான விருதுகள் பெற்ற 20 தலைசிறந்த பெண்களின் பட்டியலில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸும் இடம் பெற்றுள்ளார்.  


Also Read | வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? 


டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த நான்கு தசாப்தங்களாக பொது சேவையில் ஈடுபட்டுள்ளார். அவர் மருத்துவ மாணவியாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே பெண்கள் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக போராடத் தொடங்கினார். பெண்கள் அதிகாரம், பழங்குடியினர் நலன், சுகாதாரம் என சமூக மேம்பாட்டிற்கான அவரது கடுமையான உழைப்பு பாராட்டுதலுக்கு உரியது.


தமிழகத்தின் தலைமகளாய் உலகளவில் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டிருக்கும் விருது மிகவும் பொருத்தமானதே…


Also Read | ‘படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா’ ரஜினியை வாழ்த்திய தமிழிசை!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR