சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார், தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி:


கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். அவரது நுரையீரல், இதயம், சிறுநீரகத்தில் நோய் தோற்று பாதிப்பு இருந்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து இருந்தார். எனினும், செப்சிஸ் போன்ற நோய் தொற்றினால் உடல் உறுப்புகள் செயல் இழக்க தொடங்கின. மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 


அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுய நினைவோடுதான் இருந்தார். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார். விரலில் மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. எனவே அவரிடம் கைரேகை பெறப்பட்டது. என்று அப்பல்லோ டாக்டர் பாலாஜி கூறினார்.