கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,


இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும். 


ஆன்லைன் முகவரியை ‘கிளிக்’ செய்து ‘கேஸ் மெமோ’வில் குறிப்பிடப்பட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலெட் ஆகிய வழிமுறைகளில் பணத்தை செலுத்தலாம். சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். 


மேலும் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் பணியாளரிடம், டிஜிட்டல் மூலம் பணம் பெற வலியுறுத்தலாம். அதற்கான கருவியை கொண்டுவருமாறு கூறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.