ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானதா? விசிக வன்னி அரசு கேள்வி!
ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானது என சொல்கிறார்கள், அவரை கைது செய்ய வேண்டும் என விசிக வன்னி அரசு பேட்டி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் "ஜனநாயகம் காப்போம், சிறுத்தைகளின் அணிவகுப்பு" என்னும் தலைப்பில் விசிகவினரின் பேரணி நடைப்பெற்றது. ஓசூர் ராகவேந்திரா கோவில் முதல் ராம்நகர் அண்ணாசிலை வரை 2 கிமீ தூரத்திற்கு நடந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக விசிகவின் துணை பொதுசெயலாளர் வன்னி அரசு பங்கேற்றிருந்தார். பேரணிக்கு பிறகு விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது, பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் வன்னிஅரசு.
மேலும் படிக்க | கோடையில் நோ பவர்கட்: சம்மரில் கூலான செய்தி சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுகவின் ஊழல் பட்டியல் குறித்த அண்ணாமலையின் தகவல் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை நீண்டகாலமாக இதை 7 கடல் 7 மலை தாண்டி கண்டுபிடித்ததாக பேசி வருகிறார், அவர் வெளியிட்ட சொத்துப்பட்டியலில் எந்த ஆதாரமும் இல்லை. ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினர் உள்ளனர் குறிப்பாக 84கோடி ரூபாய் அண்ணாமலைக்கு கைமாறி இருப்பதாக திமுகவின் R.S.பாரதி கூறுகிறார் அதற்கான ஆதாரமும் இருப்பதாக சொல்வதால் அண்ணாமலையை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானது என்கிறார்கள், ஆருத்ரா மோசடி வழக்கில் அத்தனை மோசடியாளர்களும் பாஜகவில் உள்ளவர்கள் மக்களுக்களுடைய பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் விசாரணை நடத்தி அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தால் எல்லாம் சாதிக்க முடியும் என நம்புகிறார்கள் RSS அமைப்பினர் ராமநவமி என்கிற பேரணியில் மிக மோசமான வன்முறையில் ஈடுபட்டார்கள், அதற்கு RSS,VHP தான் காரணம். வடமாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தமிழகத்திலும் வன்முறை கட்டவிழ்க திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து RSS பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | "பில் தானே கேட்டீங்க சீரியல் நம்பருமா கேட்டீங்க" வானதி சீனிவாசனின் பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ