Senthil Balaji: வழக்கு வரும் தயாராக இருங்க அண்ணாமலை - செந்தில் பாலாஜி அடுத்த பிளான்

தன்னைப் பற்றி தவறான தகவல் கொடுத்திருக்கும் அண்ணாமலைக்கு சரமாரி கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 10:49 AM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி
  • அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு
Senthil Balaji: வழக்கு வரும் தயாராக இருங்க அண்ணாமலை - செந்தில் பாலாஜி அடுத்த பிளான் title=

அண்ணாமலையின் எக்ஸ்எல் சீட்

கோவையில் வஉசி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள். பில் என காகிதத்தை வெளியிட்டார். இந்த எக்ஸ் எல்  சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது?. எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை... பிரியாணிதான் வாங்கினார் - வெளியான புதிய ஆதாரம்!

பட்டியலை வெளியிடுங்கள்

அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம். மாத மாதம் இதை யார்  கொடுக்கின்றார்?. ஒரு மாதம் உதவி செய்யலாம். வருடம் முழுக்க யார் உதவி செய்வார்?. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால்,  பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா?, வார் ரூமில் செய்யப்படும்  வசூல்தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்  சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு  செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அவரக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்கவில்லை.

பொய் சொல்கிறார் அண்ணாமலை 

அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியத்தற்கு பதிலாக வீடியோ ரெக்கார்டு  பண்ணி அனுப்பி இருக்கலாம். பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கியது 4.5 லட்சம் ரூபாய், அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக  சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர  குறையாது. வாட்ச் நம்பரையும்  மாற்றி மாற்றி சொல்கின்றார். அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் அண்ணாமலை. பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு  என்ன தயக்கம்?. தேசியக் கட்சியில் இருந்து கொண்டு  எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்கிறார்.

அந்த நண்பர்கள் யார்? 

அவர் வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகையை யார் கொடுக்கிறார்?. காருக்கு  யார் டீசல் - பெட்ரோல் அடிக்கிறார்?. மூன்று உதவியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்?. 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா?. தூய்மையாக இருக்கின்றீங்க  என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க?. தன்னை விட தனது மனைவி அதிகம் சம்பாதிப்பதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார். அப்படி இருக்கும்போது ஏன் அடுத்தவன் காசில், அடுத்தவன் சொத்தில் வாழ்கிறார்?. படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பேசும் டயலாக் போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைப் போல பயன்படுத்துவதெல்லாம் நான் தான், ஆனால் கொடுப்பதெல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கின்றது. இதுவே ஒரு அரசியல்வாதிக்கு அசிங்கமான விசயம் இல்லையா?. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு 

என்னைபற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கிறேன். ஒரு பொய்யை றைக்க ஓராயிரம் பொய்யை சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு கனிமொழியின் காட்டமான ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News