தனது கட்சியினர் அமைச்சர்களாக இருந்தபோது, மத்திய அமைச்சர்கள் என்று பெருமையோடு அழைத்த மு.க.ஸ்டாலின் இன்று மாறியது ஏன் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் பதவியேற்றுக் கொண்ட தமிழக அரசு, மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. இது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் மத்திய அரசு என்று அழைக்காமல் ஒன்றிய அரசு என்றே அழைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தனது கண்டனங்களை தொடர்ந்து எழுப்பிவருகிறது. இது தொடர்பாக சில நாட்கள் முன்னதாக கண்டனம் தெரிவித்த ஹெச்.ராஜா, மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றால், மாநில அரசை ஊராட்சிகளின் அரசு என்று அழைப்பீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.


Also Read: கலைஞர் கருணாநிதிக்கு Bharat Ratna கொடுக்கப்பட வேண்டும் திமுக கோரிக்கை


இந்த விமர்சனங்கள் தொடர்பாக நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. அந்த வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் அந்த குறிப்பிட்ட வார்த்தையை பயன்படுத்துகிறோம். இனிமேலும் பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்” என தெரிவித்திருந்தார்.


அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் திமுக அமைச்சர்கள் இருந்தபோது அவர்களை மத்திய அமைச்சர்கள் என்றுதானே அழைத்தனர்? அப்போதே இவர்கள் பெருமிதத்தோடு. ஒன்றிய அமைச்சர்கள் என்று அழைத்திருக்கலாமே? இப்போது என்ன ஞானோதயம் வந்துவிட்டது எனத் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார் குஷ்பூ



இங்கே யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் (Union of States) என்ற வார்த்தையை மாறுபட்ட கோணங்களில் பார்க்கின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்பதாக நான் அதைப் பார்க்கிறேன். இந்தியாவாக, பாரதமாக, இந்தியக் குடியரசாகப் பார்க்கிறேன். ஆனால், திமுகவினர் ஒன்றிய அரசு என்கின்றனர்.



''மாநிலங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல இந்தியா. இந்தியாவால் உருவாக்கப்பட்டவையே மாநிலங்கள். கருத்து சொல்வதற்கு முன்னர் எதையும் புரிந்துகொண்டு பேசுங்கள். எனவே இனிமேல் நமது நாட்டை இந்தியா அல்லது பாரதம் என்ற அதன் இயற்பெயர் மூலமே அழையுங்கள். அரசியல் ரீதியாகத் துல்லியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்தியக் குடியரசு (Republic of India) என்று வேண்டுமானால் அழைக்கட்டும். அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்தப் பெயர்தானே அதிகாரபூர்வமாக இடம்பெற்றிருக்கிறது?



இந்த ஞானோதயம் மே 2-ம் தேதிக்குப் பின்னர் தோன்றியது தான் ஆச்சரியமாக இருக்கிறது! மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். மாற்று சிந்தனை வரவேற்கக்கூடியதே. 


இந்த ஞானம் ஒருவேளை மிகவும் தொலைவான நாட்டில் தூங்கிக் கொண்டிருந்ததோ? இத்தகைய வார்த்தைப் பிரயோகத்தின் பின்னணியில் உள்ள உங்கள் திட்டம் என்ன என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்'' என்று  குஷ்பு, முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Also Read | தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR