நாடாளுமன்றத் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும். அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து மாமல்லப்புரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; உஅதிமுகவின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும். உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை, என்பது சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அதிமுக பெற்ற, வெற்றி மூலமாக நிரூபணமாகிவிட்டது. ரஜினிகாந்த் இப்போதும் ஒரு நடிகர்தான். அவர் இன்னும் கூட, கட்சி ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்திடம், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக முன்பு கூறிய உங்கள், நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா என்று நிருபர்கள், கேட்டதற்கு, இன்னமும்கூட ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருகிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிக் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.