ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமமுக பொதுச்செயலாளரும், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.


துணைப்பொதுச்செயலாளராக பி.பழனியப்பன், எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக ஆர்.மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அமமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறுகையில்; நிர்வாகிகள் வைத்துதான் கட்சி இருக்கிறதா?. பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும். நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறுவது சசிகலாவுக்கு தெரியும். தமிழக அரசு ஆர்.கே.நகர் தொகுதியை புறக்கணித்து வருகிறது. பதவியை காப்பாற்றிக் கொள்ளவே இரத்தினசபாபதி, கலைச்செல்வன் மீண்டும் அணி மாறியுள்ளனர்.